Latest News

January 10, 2012

பேராதனை பல்கலை மாணவர்கள் வகுப்பு பகுஷ்கரிப்பில்
by admin - 0

பேராதனை பல்கலைக்கழக கால்நடை விஞ்ஞான பீட மாணவர்கள் பாரிய வகுப்பு பகிஷ்கரிப்ரை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் மாலன் பண்ராட மற்றும் கால்நடை விஞ்ஞான பீட மாணவர் சங்கத் தலைவர் சுபுன் சாஸ்மால் ஆகியோருக்கு விதிகப்பட்டுள்ள வகுப்புத் தடையை கண்டித்தே மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவ குழுக்கள் இரண்டுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அவ் மாணவர்கள் இருவருக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹபின் என்ற மாணவனுக்கு நேற்றைய தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கும் மாலன் என்ற மாணவனுக்கு பெப்ரவரி 20ஆம் திகதி வரையிலும் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments