தமிழக வியாபாரியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக வெளியான செய்தியை நடிகை அசின் மறுத்துள்ளார். கோலிவுட்டில் கோலோச்சிவிட்டு பாலிவுட்டுக்கு சென்றவர் நடிகை அசின். இந்தியில் அவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அம்மணிக்கு வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. தற்போது ஹவுஸ்புல் 2, போல் பச்சன் ஆகி 2 படங்களில் நடித்து வரும் அசினுக்கு அழகு குறைந்து விட்டது என்றும், இந்தி நடிகைகள் போல் மெலிவதற்கு விசேஷ பயிற்சிகள் எடுத்து ஒல்லியாகி பழைய வசீகரத்தை இழந்து விட்டார் என்றும் பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அசினுக்கும், தமிழக வியாபாரி ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் மும்பை பத்திரிகைகளில் கிசுகிசு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு நடிகை அசின் கோபமாக பதில் அளித்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழக வியாபாரியுடன் திருமணம் நிச்சயமாகி விட்டதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்தி வெளியாகியிருப்பது வருத்தம் அளிக்கிறது. எனக்கு 26 வயதுதான் ஆகிறது. சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் 7 ஆண்டுகள் திருமணத்தை பற்றி யோசிக்கவே மாட்டேன். இந்தியில் நான்தான் படங்களை குறைத்துக் கொண்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். வருங்காலத்தில் முதல் இடத்தை பிடிப்பேன். தென்னிந்திய மொழி படங்களிலும் வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதைகள் இல்லாததால் நடிக்கவில்லை. நான் உடல் மெலிந்ததற்கு காரணம் இருக்கிறது. அதை விரைவில் அறிவிப்பேன், என்று கூறியுள்ளார்
No comments
Post a Comment