Latest News

January 26, 2012

டாக்டர் நமது எம்.ஜி.ஆர். பதிப்பாளர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கம்
by admin - 0

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியராக கவிஞர் மருது அழகுராஜும், பதிப்பாளராக பூங்குன்றனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பதிப்பாளராக சசிகலா இருந்து வந்தார். அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய செய்தி நமது எம்ஜிஆரில் வெளியானபோதும் சசிகலாதான் பதிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. ஏற்கனவே சசி ஆதரவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர். விரைவில் அமைச்சரவை மாற்றப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் பதிப்பாளராக பூங்குன்றனும், ஆசிரியராக கவிஞர் மருது அழகுராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் சித்திரகுப்தன் என்ற பெயரில் திமுகவை ரவுண்டு கட்டி போட்டுத் தாக்கியவர் இந்த கவிஞர் மருது அழகுராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments