Latest News

January 24, 2012

சினிமா படப்பிடிப்புகளுக்கு சிக்கல்
by admin - 0

சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவால் தமிழ் படங்களின் படப்பிடிப்புகளுக்கு இன்று முதல் சிக்கல் ஆரம்பமாகியுள்ளது. இதனால், 50 படங்களின் படப்பிடிப்புகள், தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சி சங்கம் தனிச்சையாக முடிவெடுத்ததால், தயாரிப்பாளர் சங்கத்திற்கும்-பெப்சி சங்கத்திற்கும் மோதல் ஏற்பட்டடுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் தயாரிப்பாளர்களுக்கும்,"பெப்சிக்கும் இடையே இன்று முதல் எந்த ஒப்பந்தமும் இல்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், படப்பிடிப்புகளில், யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு குறித்து, "பெப்சி நிர்வாகம் கூறியதாவது:தயாரிப்பாளர்களில், 60 சதவீதம் பேர், பிரச்னையின்றி சம்பளம் கொடுத்து வருவதால், படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. 40 சதவீத தயாரிப்பாளர்கள் மட்டுமே, புதிய சம்பளம் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால், நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்தப் போவதில்லை. சம்பளத்தில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

சம்பள பிரச்னையில் சுமுக முடிவு எடுக்காமல் பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால், இனி தமிழ் படங்களின் படப்பிடிப்புகளுக்கு சுமுகமாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளுக்கு, இன்று முதல் சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.

« PREV
NEXT »

No comments