Latest News

January 24, 2012

நண்பனில் நானும் ஒருவன்-விஜய் அடக்கம்
by admin - 0

நண்பன் என்னும் நல்ல படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று 'இளைய தளபதி' விஜய் அமைதியாகத் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடித்த நண்பன் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது. தினமும் செய்தித்தாள்களில் அந்த படத்தைப் பற்றிய செய்தி தான். இந்நிலையில் படம் குறித்து அடக்க ஒடுக்கமாக பேசி வருகிறார் விஜய்.

இந்த படத்தின் வெற்றி குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நண்பன் இயக்குனர் ஷங்கரின் படம், என்னுடையதல்ல. திரைக்கதை தான் படத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் ஹீரோ செய்ய வேண்டியதை திரைக்கதை செய்துள்ளது. நான் படத்தில் ஒருவன் அவ்வளவு தான். நண்பன் படப்பிடிப்பு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.

இந்த படம் கல்வியைப் பற்றியது. ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கிறதோ அதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். நான் எனது மனம் சொல்லியதை கேட்டதால் தான் இன்று நடிகனாகியுள்ளேன். இந்த கருத்தை தான் நண்பன் சொல்கிறது என்றார்.

« PREV
NEXT »

No comments