Latest News

January 24, 2012

பதற்ற நிலையை அடுத்து180 தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் அனைவரும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
by admin - 0

மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அங்குள்ள கைதிகள் சிலர் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு தற்போது மாற்றப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உள்ளிட்ட 45ற்கும் மேற்பட்டோரை ஏற்றிய சிறைச்சாலை பஸ் ஒன்று சற்று நேரத்திற்கு முன்னர் பாணந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஏனைய கைதிகள் சிலரும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த தகவலின்படி மெகசின் சிறைச்சாலையில் இருந்த 180 தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் அனைவரும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments