Latest News

January 24, 2012

வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம், 19 பேருக்கு காயம்
by admin - 0

வெலிகடை, மெகசின் சிறைச்சாலையில் நிலவிய பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் 19 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments