Latest News

January 23, 2012

பாரசீகக் குடாவில் போர் மூளும் சாத்தியம்? _
by admin - 0


அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணைப்பகுதிக்கு தமது போர்க் கப்பல்களை அனுப்பியிருப்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் அண்மையில் ஹோர்முஸ் நீரிணைப்பகுதியை மூடிவிடுவதாகத் தெரிவித்தமையை அடுத்தே இவ் அதிரடி முடிவினை மேற்குலக நாடுகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹோர்முஸானது பாரசீகக் குடாவையும், ஓமான் குடாவையும் இணைக்கும் நீரிணைப்பகுதியாகும்.

பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெற்றோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழியாகும்.

கப்பல்கள் மூலம் சராசரியாக 17 மில்லியன் பெரல்கள் எண்ணெய் அதாவது உலக எண்ணெயின் 35% தினசரி இப் பகுதியினூடாகவே அனுப்படுகின்றன.

இது உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் சுமார் 20% ஆகும்.

இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, பொருளாதார ,இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒரு பகுதியாகும்.

மேற்குலகினால் தம்மீது பிரயோகிக்கப்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இப்பகுதியை மூடி விடவுள்ளதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 100,000 தொன்கள் நிறைகொண்ட 'USS Abraham Lincoln' என்ற விமானத்தாங்கி அமெரிக்க கப்பல் ஹோர்முஸ் பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் கடுந்தொனியிலான எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கக் கப்பல் அங்கு நுழைந்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தனித்தனியாக பாரசீக வளைகுடாப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கமாகும்.

இம்மூன்று நாடுகளினதும் கப்பல்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் பிரவேசித்திருப்பதானது பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. _
« PREV
NEXT »

No comments