குருநாகல் - பிங்கிரிய பகுதியில் கோழி பண்ணை ஒன்றில் அடுத்தடுத்து கோழிகள் உயிரிழந்த நிலையில் அதில் உயிரிழந்த கோழி ஒன்றுக்கு பரவைக் காய்ச்சல் போன்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கால்நடைகள் மற்றும் விலங்கு திணைக்களம் மேற்கொண்ட சோதனையின் போது இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹீபாலவின் தலைமையில் நேற்று (31) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி சோதனையில் கண்டறியப்பட்ட நோய் குறித்து பிங்கிரிய, சிலாபம் மற்றும் ஹெட்டிபொல ஆகிய வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
No comments
Post a Comment