நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் உரையாற்றி சோதிடர்கள் சிலர், 2012 ஆம் ஆண்டு தற்போதைய இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை இழக்கும் என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஈழ ஆதரவாளர்களின் பலம் அதிகரிக்கும் என கூறியுள்ளதாகவும் இதன் மூலம் இந்த திட்டம் உறுதியாகி உள்ளதாக திவயின கூறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சி, இதனை ஒளிப்பரப்புவதற்கு முன்னர், யாழ்ப்பாண குடாநாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை ஒன்றிணைத்து, மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிரூட்ட, புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டிருந்த ரகசியமான வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை இராணுவ புலனாய்வு பிரிவினர் கண்டறிந்திருந்தனர் திவயின.
No comments
Post a Comment