தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாரா தற்போது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
ஸ்ரீ ராம ராஜ்ஜியம் திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ள நயன்தாராவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள 49 மையங்களில் இப்படம் திரையிடப்பட்டு 50 நாட்களை தாண்டியுள்ளது.
இப்படத்தின் 50 வது நாள் விழா ஹைதெராபாத்தில் உள்ள ஷில்பா கலா வேதிகா அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாரம்பரிய பட்டு சேலை உடுத்தி தமிழ் கலாச்சாரத்துடன் அழகாக காணப்பட்டார் நயன்தாரா.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நயன்தாரா சமீப காலமாக கலாச்சாரத்துடன் தான் காணப்படுகிறாராம்.
No comments
Post a Comment