Latest News

December 19, 2011

நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார் பேட்டி
by admin - 0

மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறிய புகாருக்கு சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன் என்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 6 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இதற்காகத் தான் அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டவுடன் அவர் பதட்டமடைந்தார். வழக்கமாக போராட்டங்கள் குறித்து நிறுத்தி, நிதானமாகப் பேசும் அவர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள், நிதி' போன்ற வாசகங்களால் அதிர்ச்சியடைந்தார்.

அவர் கூறுகையில், "எந்த நிறுவனத்தில் இருந்தும் ஐந்து பைசா கூட வரவில்லை. ஒருவேளை பணம் வந்திருந்தால், அதை காங்கிரஸ்காரர்கள் வழிமறித்து பிடுங்கியிருப்பார்கள் என தோன்றுகிறது. இத்தகைய புகார்கள் கூறும் நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்'' என்றார்.
« PREV
NEXT »

No comments