தமிழக கேரளாவை இணைக் கும் 13 பாதைகளை பெரும்பாலானவற்றில் பிரச்னை நிலவுவதால் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதாரத் தடை மூலம் தான் கேரளாவுக்கு பாடம் கற்பிக்க முடியும் என பல்வேறு தமிழ் அமைப்புகள் நம்புவதால் கேரளாவிற்கு தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
கடந்த வாரம் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் இயக்கத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து செங்கோட்டையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு போராட் டக்குழு அமைக்கப்பட்டு நாளை (19ம் தேதி) சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், வியா பாரிகள், அனைத்து லாரி, கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ள நிலையில் நாளை நடைபெறும் சாலைமறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஆங்காங்கே போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரை பீய்ச்சி கூட்டத்தை கலைக்கு வஜ்ரா வாகனம், கலவர தடுப்பு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுடன் போலீசார் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் நாம் தமிழர் இயக்க நிறுவனத்தலைவர் சீமான் பங்கேற்பதால் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் பன்மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி புளியரை பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.
No comments
Post a Comment