Latest News

December 18, 2011

அஜித்தின் 53-வது படம்!
by admin - 0

மங்காத்தா வெற்றிக்குப் பின் பில்லா-2 படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும் அஜித் படத்தின் கதையை பொறுமையாக கேட்டு பலமுறை யோசித்த பின்னரே முடிவெடுக்கிறார்.பிரபல தயாரிப்பாளரும் திரைத்துறை முன்னோடிகளில் ஒருவருமான நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்த விஜயா குழுமம், இந்த ஆண்டு அஜித்தை வைத்து படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை சிறுத்தை படத்தின் இயக்குனர் சிவா இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இனி வெற்றிப் படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு தர வேண்டும் என்ற யோசனையில் தான் அஜித் படங்களை முடிவெடுப்பதில் இவ்வளவு பொறுமை காட்டுகிறார் என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments