எல்லாவிதமான புகழையும் தனக்கு போதும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பணத்தையும் சம்பாதித்த ஒரு மாகான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான். ஒரு தலைவராவதற்கு அத்தனை தகுதிகளையும் கொண்ட மனிதர், பணத்தால் புகழால் அத்தனை வசதிகளையும் கொண்ட ஒரு மனிதர் எதற்காக யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பின்னால் நடிக்க வந்தவர்கள், அவரைப் பார்த்து நடிக்க வந்தவர்கள், அவர் யோசித்துக் கொண்டிருக்கும் கேப்பில் உள்ளே பூந்தவர்கள், சூப்பர் ஸ்டார் யோசித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தூக்கிப்பிடிக்கப்பட்ட இந்த கொடிக்கே இவ்வளவு மரியாதை இந்த தமிழ்நாட்டிலே என்று சொன்னால்... ரஜினிகாந்த் நினைத்தால் என்ன நடக்கும் என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கே தெரியும்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்களுக்கு இருக்கும் ஏக்கம் எனக்கும் இருக்கிறது. காலம் வருகின்றபோது அது நடக்கும். இன்றைக்கு 10% வாக்கு வங்கியோடு சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்தால் இந்த இடத்தை பிடிக்க முடியும் என்று சொன்னால், என் தலைவன் ரஜினிகாந்தால் தமிழ்நாட்டின் சிம்மாசனத்தை பிடிக்க முடியும் என்பதுதான் ரசிகர்களின் கருத்து.
இன்று சில நடிகர்கள் உடனடியாக சூப்பர்ஸ்டாராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இரண்டு படம் ஓடிவிட்டால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தோடு போட்டி என்று நினைகிறார்கள். ரஜினிகாந்த் இன்னும் கொடியையே உருவாக்கவில்லை, ஆனால் அதற்குள் சில நடிகர்கள் கொடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கொடிகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று யோசித்துப் பாருங்கள். அவரால் கவரப்பட்டு இந்த இடத்திற்கு வந்தவர்கள், இன்று எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று நினைத்தால், என்னால் இது முடியுமா என்று தன்னடக்கத்தோடு ஒரு மனிதன் தவம் இருக்கிறான் என்றால் அவர் தான் சூப்பர் ஸ்டார்.
ஆகவே ரசிகர்களே நீங்கள் செய்ய வேண்டியது, 35 ஆண்டுகள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், விசுவாசமாக ஒரு உணர்ச்சிமிக்க தலைவனுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே... உங்களுடைய இறுதிகாலம் வரை கொடுத்துக்கொண்டே இருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் என்று ரசிகர்களின் பலத்த கரவொலிக்கு நடுவே பேசினார்.
No comments
Post a Comment