சமூக இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் கருத்துக்களுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும், ஆபாசமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் சமீபத்தில் இணையத்தள நிர்வாகிகளை அழைத்து உத்தரவு போட்டார். கருத்து சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
இந் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இணையத்தளத்துக்குள் யாரோ புகுந்து அதை ஹேக் செய்துள்ளனர். சோனியா காந்தியின் 65வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனியாவின் சுயவிவரம் (profile page) அடங்கிய பக்கத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதில் ஆபாசப் தகவல்களை யாரோ பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் ஒரு பாகிஸ்தான் இ-மெயில் குறித்தும் எழுதப்பட்டிருந்தாலும், ஹேக் செய்தது யார் என்ற தகவலோ, இதற்கு யாரும் பொறுப்பேற்கவோ இல்லை.
இந்த சம்பவத்தையடுத்து அதில் பதிவேற்றப்பட்ட ஆபாச கருத்துக்களை உடனடியாக நீக்கிவிட்டு இணையத்தளத்தையும் காங்கிரஸ் உடனடியாக முடக்கிவிட்டது.
No comments
Post a Comment