Latest News

December 03, 2011

குண்டைக் கண்டுபிடித்து பிரிட்டிஷ் படை வீரர்களை அதிரடியாக காப்பாற்றிய நாய்!
by admin - 0

மிகப்பெரிய சேதங்களை விளைவிக்கும் குண்டு ஒன்றை ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் படையினரின் நாய் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

20 Kg பெறுமதியான குண்டை Belgian shepherd என்ற இரண்டு வயதான நாய் தனது மூக்கினால் துப்பறிந்து கண்டு பிடித்துள்ளது.

ஒஸ்லோ என்று அழைக்கப்படும் குறித்த நாயை வழிநடத்தும் 28 வயதான பிரித்தானியப் படை வீரர் கருத்துத் தெரிவிக்கையில்,

குண்டு வெடிப்பதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டதால் பலருடைய உயிர்கள் மயிரிழையில் காப்பாற்றப்பட்டன. அந்த நேரம் ஒஸ்லோவை நினைத்தால் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. என்றார்.

ஒஸ்லோவுக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

« PREV
NEXT »

No comments