Latest News

December 03, 2011

போபால் விஷவாயு விபத்து: ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் பொலிஸ் மோதல்
by admin - 0

போபால் விஷவாயு விபத்தின் இருபத்து ஏழாவது நினைவு தினத்தை முன்னிட்டு போபாலில் ரயில்பாதையை மறித்து போராட்டம் செய்ய முயன்ற ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் எழுந்துள்ளன.

போபால் விஷவாயு விபத்து என்பது உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்து ஆகும். இதில் குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
1984ல் யூனியன் கார்பைடு இரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிந்ததால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலர் இன்றளவும் இந்த விபத்தின் தாக்கங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
யூனியன் கார்பைடு தொழிற்சாலையை பின்னர் வாங்கிய டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் பாதிக்கபட்டோருக்கு கூடுதல் நஷ்டஈடுகளை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
தவிர லண்டனின் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுடைய உத்தியோகபூர்வ அனுசரணையாளர் பட்டியலில் இருந்து டௌ கெமிக்கல்ஸ் நீக்கப்பட வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஏற்கனவே நஷ்டஈடுகளைக் கொடுத்து விவகாரத்தை தீர்த்துவிட்டதாக டௌ நிறுவனம் கூறுகிறது.
« PREV
NEXT »

No comments