Latest News

January 01, 2012

இந்துக்களின் பஞ்சாங்கத்துக்கு ஒப்பான 5125 வருடங்கள் பழமையான மெசோ அமெரிக்கன் எனப்படும் மாயன் கலெண்டரில்ட் டிசம்பர் 21 2012 இற்கு பிறகு திகதியே இல்லை -2012 குறித்து உலக மக்கள் அனைவருக்கும் மறை முகமாகவேனும் சிறு அச்சம் உள்ளதே என்பது மறுக்க முடியாது
by admin - 0

மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் புதுவருடம் 2012 பிறந்து விட்டது. உலக நாடுகளுக்கிடையே பொருளாதார முன்னேற்றம்



இயற்கை அனர்த்தம் தொடர்பாக பெரும்பாலான மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள வருடம் இது.
இரு வருடங்களுக்கு முதல் ஹாலிவுட்டில் 2012 என்ற பெயரிலையே அவ்வருடம் சுனாமி,நில நடுக்கம்,புயற்காற்று என்பன ஏற்பட்டு பேரழிவுகள் நிகழும் என மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் கிளப்பிய திரைப்படம் வெளியாகி 2012 குறித்து ஒரு எதிர்மறையான சிந்தனைகளை விதைத்திருந்தது.

பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என இப்படத்தை தயாரித்தவர்கள் கூறக் காரணம் சூரிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பண்டைய மாயன் இனத்தினர் கணித்த காலெண்டரில் டிசம்பர் 21 2012 ஆம் ஆண்டு இக் கலெண்டரின் திகதிகள் யாவும் முடிவடைவதால் அம்மக்களின் நம்பிக்கை படி உலகின் கடைசி நாள் அது என்றும் அன்றைய தினம் பூமி அழிவடையும் என்றும் பரவலாக நம்பப் படுவதே ஆகும்.

பௌதிகவியலின் படி சூரியனைச் சுற்றி வரும் புவியின் இயக்கத்தில் சிறு மாறுதல் ஏற்படும் எனவும் புவி தன்னைத் தானே சுற்றி வரும் சுழற்சி வேகம் அதிகரிக்கும் எனவும் இதனால் நில நடுக்கம், கடல் அலைகள் மேலே எழும்பி சுனாமி போன்றன ஏற்பட வழி உண்டாகும் எனவும் எதிர்வு கூறப் படுகின்றது.

இதே கட்டத்தில் இன்னொரு சாரார் முக்கியமாக ஆன்மிகவாதிகள் அதிலும் இந்துக்கள் கூறும் கருத்து என்னவென்றால் 2012 இல் உலகளாவிய ரீதியில் அழிவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்ற போதும் இவற்றின் காரணமாக பழையன கழிதலும் புதியன புகுதலும் போல இவ்வழிவுகள் யாவும் நண்மைக்கே என்பதாகும். அதாவது 2012 பொன்வருடம் எனவும் அழிவுகளின் பின்னர் சத்திய யுகம் மலர்ந்து விடும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

இன்னொரு விதமாக இவர்கள் கூறுவது என்னவென்றால் புவியீர்ப்புக்கும் மனித மனத்திற்கும் தொடர்புள்ளது என்பதாகும். மனிதனின் தீய எண்ணங்களே பூமியில் சண்டை சச்சரவுக்கும் நல்லிணக்கம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் எனவும், இவ்வெண்ணங்கள் மனதில் மேலோட்டமாக மிதந்து கொண்டிருக்கும் எனவும் பூமியின் சுழற்சி அதிகரிப்பதால் கண்ணுக்குத் தெரியாமல் ஈர்ப்பு அதிகரித்து இவ்வெண்ணங்கள் யாவும் காய்ந்த தென்னம் ஓடு பிரிவது போல மனதை விட்டு அகன்று விடும் எனவும் இதனால் மனிதனின் நல்லெண்ணங்கள் மட்டும் எஞ்சி அவன் கிட்டத்தட்ட ஞானம் அடைந்த ஒருவனாக மாறும் சாத்தியம் உள்ளது என்பதும் இவர்கள் கருத்து.

ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார, சமூக ரீதியாகவும் தீர்க்கவே முடியாதோ எனத் தோன்றும் சிக்கல்கள் அதிகளவு ஏற்பட்டே இந்நிலை ஏற்படும் எனவும் கருதப் படுகின்றது.

இந்துக்கள் மற்றும் தமிழர்களின் ஜோதிட முறையில் ஞாயிற்றுக் கிழமை மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறக்கின்றது. இவர்களின் கணிப்பின் படி பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்ட போதும் பேரழிவை கொண்டு வரும் சுனாமி போன்றன ஏற்படும் என கூறப்படவில்லை. மாறாக மழைவீழ்ச்சி அதிகரிக்கும். பயிர்கள் செழிக்கும் என்றே கூறப்படுக்கின்றது.

இந்துக்களின் பஞ்சாங்கத்துக்கு ஒப்பான 5125 வருடங்கள் பழமையான மெசோ அமெரிக்கன் எனப்படும் மாயன் கலெண்டரில்ட் டிசம்பர் 21 2012 இற்கு பிறகு திகதியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூற்றுப்படி சூரியனின் விட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் பூமி கருந்துளை ஒன்றுடன் மோத அல்லது நிபிரு எனும் விண்கல் பூமியில் விழ வாய்ப்பு உள்ளது எனவும் அழிவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் 2012 குறித்து உலக மக்கள் அனைவருக்கும் மறை முகமாகவேனும் சிறு அச்சம் உள்ளதே என்பது மறுக்க முடியாது. மிகுந்த பட்ஜெட்டில் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட 2012 திரைப்படமும் இதற்கு ஒரு காரணம்.
« PREV
NEXT »

No comments