Latest News

January 01, 2012

U.S இலிருந்து ஐரோப்பாவுக்கு பாலியல் தொற்று நோயை கொண்டுவந்த கொலம்பஸ்
by admin - 0

1942 இல் அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து அமெரிக்காவை கண்டுபிடித்தார் கொலம்பஸ் என்பது
வரலாறு. ஆனால் அந்த வரலாற்று பயணத்தை முடித்துக்கொணெடு அவர் ஐரோப்பாவுக்கு மீண்டும் திரும்பிய போது பாலியல் நோய்த்தொற்று கிருமிகளையும் கொண்டு சென்றார் என்கிறது புதிய தகவல்கள்.
கொலம்பஸும் அவரது கடல் மாலுமிகளும், Syphilis – Treponema pallidum bacteria எனும் குறித்த நோய்த்தொற்று கிருமிகளை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றதாகவும், 1495ம் ஆண்டு இந்நோய் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி கண்டு பரவத்தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புதிய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குணப்படுத்த முடியாத இந்நோய் இதயம், மூளை, கண்கள், எலும்புகள் என அனைத்தையும் தாக்க கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேபில்ஸ் மீது பிரெஞ்சு மன்னர் படையெடுத்த பின்னர் இராணுவ தளபத்தி சார்ல்ஸ் VII க்கு இந்நோய் தொற்றியிருந்ததாகவும், பின்னர் ஐரோப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக பாழ்படுத்த தொடங்கியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லாண்டாவை சேர்ந்த எமோரி பல்கலைக்கழகத்தின் எலும்பு உயிரியல் ஆராய்ச்சியாளர் ஜோர்ஜ் ஆர்மெலாகோஸ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் Syphilis நோய்த்தொற்று உலகத்துக்கு பாரிய தொல்லையை கொடுத்து வந்தது. ஆனால் 1500 ம் ஆண்டு வரை, தொழுநோய் போன்ற மற்றைய அழுகும் நோய்களிலிருந்து Syphilis தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments