Latest News

November 12, 2011

கடல் வெள்ளரிகளுடன் கல்பிட்டியில் ஒருவர் கைது
by admin - 2

புத்தளம் - கல்பிட்டி அகதிகள் முகாம் பகுதிக்கு அருகில் இருந்து கடல் வெள்ளரிகள் அடங்கிய 66 பொதிகளை கைப்பற்றியுள்ள கல்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மீன்பிடி கட்டளைச் சட்டத்தின்படி மருந்து பொருளுக்குப் பயன்படுத்தப்படும் அரியவகை கடல்வெள்ளரிகள் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடல் வெள்ளரிகள் வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்ல வைக்கப்பட்டிருந்ததென சந்தேகிப்பதாகக் கூறிய பொலிஸார் கடல் வெள்ளரியின் பெறுமதியை கணித்து வருகின்றனர்.

« PREV
NEXT »

2 comments

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Sea cucumber- என்பதை நீங்கள் கடல் வெள்ளரி என மொழிபெயர்த்துள்ளீர்கள்.
ஆனால் இதனை கடலட்டை என்பர்.

admin said...

கடலட்டை = கடல் வெள்ளரி
நன்றி நண்பரே எதாவது பிழை இருந்தால் சொல்லவும்