Latest News

November 12, 2011

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்
by admin - 0

எமது இந்த பிரபஞ்சம் மிகவும் விசாலமானது. இது பல பில்லியன் நட்சத்திர மண்டலங்களைக் கொண்டது. நாம் பால்வெளி என்னும் நட்சத்திர மண்டலத்தில் சூரிய குடும்பத்தில் இருக்கிறோம். இங்கு சூரியனைப் போன்று 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் பல ஒளியாண்டு தொலைவில் உள்ளன. ஒரு ஒளி ஆண்டு என்பது 180000×1.6x3600x24x365 கிலோ மீற்றர் தொலைவாகும்.

எமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் குறுக்களவு 50,000 ஒளியாண்டுகளாகும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

எனவே நாம் பிரபஞ்சத்தில் பிரயாணம் செய்வதென்றால் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் செல்ல முடியாது.

ஒளியின் வேகத்தில் சென்றால் செல்லும் பொருள் அதனுடைய உருவில் இருக்க முடியாதென பிரபல ஆய்வாளரின் கோட்பாடு ஒன்று கூறுகிறது.

இவ்வாறு பிரபஞ்சத்தில் நாம் பிரயாணம் செய்தால் எமது சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றும் என்பதனை அவுஸ்திரேலியாவின் பௌதீக விஞ்ஞானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்

.இவரது கருத்துப்படி அந்த வேகத்தில் செல்லும் போது ஒளியின் பாய்ச்சும் இடைவெளி குறைவடையும் எனக் குறிப்பிட்டார். இதன் சுற்றால் உள்ள கிரகங்கள் பல நிறங்களாக மாற்றம் அடையலாம்.

அதாவது ஆரம்பத்தில் கிரகம் சிவப்பு நிறமாகவும் பின்னர் பச்சை நிறமாகவும் பின்னர் கறுப்பு நிறமாகவும் மாற்றம் அடையளாம் எனவும் குறிப்பிட்டார். இதனை டொப்லரின் தாக்கத்தின் அடிப்படை என விளக்கம் கூறுகிறார்.

ஒலியின் வேகத்தின் போது அதன் அலையின் அளவு குறைவது போல ஒளியிலும் இதனை அவதானிக்கலாம் என்ற புதிய கருத்தை முன்வைத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments