இந்திய நேரப்படி இன்று காலை (அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு) இந்த சம்பவம் நடந்தது.
வெள்ளை மாளிகை அருகே இரு கார்களில் வந்த கும்பல் ஏ.கே.-47 துப்பாக்கிகளால் சுட்டதாகவும், இதையடுத்து அந்த கார்களை விரட்டிச் சென்ற உளவுப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக உயர்ந்த பாதுகாப்பு மிகுந்த வெள்ளை மாளிகை அருகே இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஹோண்டா சிட்டி கார் மடக்கப்பட்டு அதிலிருந்து ஒரு ஏ.கே.-47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவத்தையடுத்து வாஷிங்டன் டிசியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகபட்ச நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் இருந்து 2 கார்களை உளவுப் பிரிவினரின் கார்கள் லிங்கன் மெமொரியல் வரை விரட்டிக் கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டார்களா, இதில் யாரும் காயமடைந்தார்களா என்பது தெரியவில்லை.
ஹவாஸ் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஒபாமா நேற்று வாஷிங்டனில் இல்லாதபோது இந்த சம்பவம் நடந்தது.
No comments
Post a Comment