Latest News

November 16, 2011

பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச்சூடு - இருவர் படுகாயம்
by admin - 0

பொரலஸ்கமுவ - ரத்னபிட்டிய பிரதேசத்தில் சில்லறை விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமா என உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சில்லறை வர்த்தக நிலையத்தில் கொள்ளையிட வந்த குழு, வர்த்தக நிலைய உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் வர்த்தக நிலைய உரிமையாளரும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments