Latest News

November 16, 2011

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 3 நாட்களில் 2வது முறை பூமி அதிர்ந்தது
by admin - 0

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பாபுவாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.

இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் காலை பயங்கர நிலநடு்ககம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று காலை 8.42 மணிக்கு இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பாபுவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்தது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் வந்து நின்றனர். டனாமேரா, மெரௌகே மற்றும் வமேனா ஆகிய பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டது.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எப்பொழுதும் ஒருவகை பயத்துடனேயே
« PREV
NEXT »

No comments