Latest News

November 16, 2011

டெல்லி ஆட்டோ ஷோவில் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் யமஹா!
by admin - 0

வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியில் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் முற்றிலும் பறிபோனது. 100 சிசி மற்றும் 150 சிசி பைக்குகளின் மீதான மோகத்தால் ஸ்கூட்டர்கள் மவுசு குறைந்தது.

ஸ்கூட்டர் விற்பனையில் முன்னிலை வகித்த பஜாஜ் ஆட்டோகூட ஸ்கூட்டர் விற்பனையை நிறுத்திவிட்டு, பைக்குகள் உற்பத்திக்கு தாவியது.

இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி ஆக்டிவா ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பைக்குகள் மீதான மோகத்தை குறைத்து வாடிக்கையாளர் கவனத்தை தன் பால் இழுத்தது.

இதனால், பல முன்னணி நிறுவனங்கள் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளன. மேலும், இந்திய மார்க்கெட்டில் பவர் ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் யமஹா நிறுவனமும் விரைவில் இந்தியாவில் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் தனது ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் 50சிசி திறன் கொண்ட ஸூமா ஸ்கூட்டர் முதல் 500சிசி டி மேக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டர் வரை யமஹா விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 100 முதல் 125 சிசி திறன் கொண்ட தனது ஸ்கூட்டர் மாடல்களை யமஹா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பியாஜியோ நிறுவனமும் தனது வெஸ்பா எல்எக்ஸ்ஐ 125சிசி ஸ்கூட்டரை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments