Latest News

November 16, 2011

உங்களுக்குத் தெரியுமா?
by admin - 0

மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப் படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.
டி.வி.ஐ. (DVI): டிஜிட்டல் விசுவல் இன்டர் பேஸ். பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து மானிட்டருக்கு டிஜிட்டல் சிக்னலை அனுப்பும் தொடர்பு வழி.
டேக் (Tag): புக்மார்க் செய்யப்பட்ட வெப்சைட்டில் உள்ள டெக்ஸ்ட்டை அடையாளம் காண ஒரு சொல்லைப் பயன் படுத்துகையில் இவ்வாறு குறிப்பிடுகிறோம்.
கே பிட்ஸ் பெர் செகண்ட் (Kbits/sec): கிலோ பிட்ஸ் பெர் செகண்ட். ஒரு விநாடி காலத்தில் இரு வேறு டிஜிட்டல் இடங்களிடையே பரிமாறப்படும் டேட்டாவின் அளவு.
« PREV
NEXT »

No comments