Latest News

November 17, 2011

செயற்கை இரத்தத்தை விரைவில் பயன்படுத்த முடியும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை
by admin - 0

ஒட்சிசன் இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது. மனிதனது உடலில் காயம் ஏற்பட்டு அவ்விடத்திலிருந்து அதிகபடியான இரத்தம் வெளியேறும் பட்சத்தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது.

எனவே தான் செயற்கை இரத்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனர்.

இந்த இரத்தத்தை விரைவில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் மூலம் செயற்கை இரத்தத்தை தயாரித்தனர்.

இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும் இவற்றை மனித உடலில் செலுத்த முடியும் என அவர்கள் கூறினர்.

இவ்வாறு செயற்கை இரத்தத்தை செலுத்துவதன் மூலம் எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்கை இரத்தம் இன்னும் சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





« PREV
NEXT »

No comments