ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் கொள்கை (Special Theory of Relativity) சொல்லும் முக்கிய முடிவுகளில் ஒன்று. ஐன்ஸ்டைன் E = mc2 என்ற உலகப் பிரசித்தி பெற்ற நிறை – ஆற்றல் இணைமாற்றச் சமன்பாட்டை
அணுவிலும் சிறிய துகள்கள் சில ஒளியை விட அதிகமான வேகத்தில் பயணிக்கின்றன என்று அண்மையில் காட்டிய பரிசோதனையை வேறு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் செய்து பார்த்தபோது ஆம் துகள்கள் ஒளியை விட வேகமாகப் பயணிக்கின்றன என்ற முடிவேதான் இம்முறையும் வந்துள்ளன.
ஒளியின் வேகம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் அதைவிட வேகமாக எதுவாலும் பயணிக்க முடியாது என்பது பல காலமாக அறிவியல் சமூகம் நம்பிவரும் விடயம்.
அப்படியிருக்க கடந்த செப்டம்பரில் முதல் தடவையாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானபோது அதனைப் பலரும் சந்தேகித்தனர்.
அணுவாராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தின் நிபுணர்கள் மாற்றியமைக்கப்பட்ட வகையில் இந்த பரிசோதனையை செய்து பார்த்தனர்.
நியூட்ரினோஸ் என்று சொல்லப்படுகிற அணுவிலும் சிறிய துகள்கள் ஒளியை விட சற்று அதிமான வேகத்தில் செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு பரிசோதனைகள் தொடரவுள்ளன.
No comments
Post a Comment