Latest News

November 18, 2011

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை புனரமைக்க நடவடிக்கை
by admin - 0

மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரந்தனில் முன்னர் இத்தொழிற்சாலை அமைந்திருந்த அதே இடத்தில் 217 ஏக்கரில் இத்தொழிற்சாலையை 300 கோடி ருபா செலவில் மீளமைக்க அரச வளங்கள் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்தியா அயர்லாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இத்திட்டத்துக்கு நிதி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இத்தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின்னர் நாளொன்றுக்கு 25 தொன் கோஸ்டிக் சோடாவும் 25 தொன் குளோரினும் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கைக்கு வருடாந்தம் தேவைப்படும் 2000 மெற்றிக் தொன் குளோரினும் 15000 மெற்றிக் தொன் கோஸ்டிக் சோடாவும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments