இலங்கையில் வெளியாகும் அத்தகைய முதலாவது பத்திரிகை இதுவாகும்.
முதல் கட்டமாக பார்வையிழந்தோருக்கான பள்ளிக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்து அச்சிடப்படுகின்ற இந்தப் பத்திரிகை, இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பார்வையிழந்தோருக்கான பிறைலி மொழி இலங்கையில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பயிற்றப்படுகின்றது.ஆயினும் ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மூலம் கற்றும் மாணவர்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்கு தற்போதைக்கு பல வழிகள் இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழ
், சிங்களம் மூலம் கற்கும் பார்வையிழந்த மாணவர்களுக்கு தகவல்களை அறிந்து கொள்வதில் பெரும் சிரமம் இருப்பதாக விஜயா நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கே. பி. மோகன் கூறுகிறார்.
ஆகவே முதற்கட்டமாக தாம் சிங்கள மொழியில் இந்த செய்திப் பத்திரிகையை அறிமுகம் செய்துள்ளதாக அவர் கூறினார்.
இலங்கையில் பார்வையிழந்தோரின் எண்ணிக்கை எண்பதினாயிரத்துக்கும் அதிகம் என்று கூறும் அவர், தமிழிலும் தாம் இத்தகைய பத்திரிகையை கொண்டு வரும் எண்ணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment