Latest News

November 18, 2011

நீரினால் பரவும் நோய் குறித்து அவதானமாக இருக்கவும்
by admin - 0

யாழ்.குடாநாட்டில் நீரினால் பரவும் நோயகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் மக்களைப் பாதுகாப்பான குடிநீரை அருந்துமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இன்று அறிவித்துள்ளார்.

யாழில் பருவமழை ஆரம்பித்துள்ளதை அடுத்து யாழ்.வைத்திய சாலைகளில் வயிற்றோட்டம், செங்கமாரி மற்றும் நீரினால் பரவும் நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் பொதுமக்கள் குடிநீரை கொதித்தாறிய பின்னர் அருந்துமாறு அறிவுரை கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ்.வைத்திய சாலையில் நீரினால் பரவும் நோயின் காரணமாக ஒரு வாரத்தில் 20 முதல் 30 வரையான நோயளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதணைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டு மக்கள் நிரினால் பரவும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments