கல்லூரியில் படிக் கும் போது, நூலகத்தில் அகத்தியர் எழுதிய புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதிலிருந்த, முருங்கை மரம் பற்றிய பல தகவல்கள், என்னை பிரமிக்க வைத்தன.
மருத்துவக் குணத்தில் ஆரம்பித்து பல குணங்களை உள்ளடக்கிய முருங்கையை பற்றி, பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
நான் கண்டறிந்ததில் பி.கே.எம்.1, 2 என்ற இரு ரக முருங்கைகளை மட்டுமே விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தனர். அதை இரண்டு வருடங்கள் மட்டுமே சாகுபடி செய்ய இயலும், பலத்த காற்று வீசினால் சாய்ந்து விடும் என்பதை அறிந்து, நல்ல முருங்கை ரகத்தை கண்டுபிடிக்க முருங்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன்.
நான் தேர்வுக்காக எடுத்துக் கொண்டது நாட்டு முருங்கைகள் தான். மகரந்தச் சேர்க்கையின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாக அந்த ரகங்களுக்குள் கருவுறுதல் ஏற்படுத்தி, ஆய்வு செய்தேன்.
ஐந்து ரக முருங்கை மரங்களின் மகரந்த தூள்களை ஒரு மரத்தின் சூல் முடியில் தூவும் போது, புதிய ரக முருங்கையை கண்டறிந்தேன். பின், அதை ஒரு ஏக்கரில் 70 செடிகளாக பயிர் செய்தேன்.
என் ஆய்வின் படி ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.தோட்டத்தில் கரும்பு, திராட்சை, கத்தரி போன்றவற்றைக் காட்டிலும் முருங்கை மூலமாக அதிக லாபம் சம்பாதிக்கிறேன்.
விவசாயம் மீதுள்ள ஈடுபாட்டால், மாணவர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை அளிப்பேன். தற்போது பல விவசாயக் கல்லூரி மாணவர்கள் என்னிடம், பல விவரங்களைக் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். நாட்டின் விவசாயம் தழைக்க, என்னால் முடிந்ததை செய்வேன்.
No comments
Post a Comment