Latest News

November 13, 2011

வேலையற்ற பட்டதாரிகளுக்கு உரிய தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்குமாம்
by admin - 0

எதிர்வரும் வரவு - செலவுத்திட்ட வரைபு சமர்ப்பிப்புக்கு முன்னர் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத்தராவிட்டால் அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளை ஒன்றிணைத்து போராடப்போவதாக கிழக்கிலங்கை வேலையற்ற பட்டதாரி மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கிலங்கை வேலையற்ற பட்டதாரி மாணவர் ஒன்றிய கூட்டத்திலேயே அதன் தலைவர் கே.ஜெயராஜ் இதனை தெரிவித்தார். 

கிழக்கிலங்கை வேலையற்ற பட்டதாரி மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லோகிதராஜா திவாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரி மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க கலந்துகொண்டார். 

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

எமது அரசியல்வாதிகளை நம்பி எந்தப்பிரயோசனமும் இல்லை.21 தடவைகள் நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். இதுவரையில் ஒரு நிரந்தரமேனும் அவர்களால் பெற்றுக்கொடுக்கமுடியவில்லை. 

நாங்கள் ஒன்றினைந்த சக்தியாக செய்படுவதன் மூலமே எமது வேண்டுகோள்களை நிறைவேற்றலாம். 

நாம் கடந்த முறை இந்த மட்டக்களப்பில் மாபெரும் பேரணியை செய்தபோது எமக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமுமே எமக்கு உதவினர்.வேறுயாரும் எமக்கு உதவவில்லை.இதுதான் எமது இன்றைய சூழ்நிலை. 

இதேவேளை இங்கு உரையாற்றிய கிழக்கிலங்கை வேலையற்ற பட்டதாரி மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லோகிதராஜா திவாகரன், 

கிழக்கு மாகாணத்தில் 7128 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதுடன் அதிகளவான் வேலைவாய்ப்பற்ற 3000 பட்டதாரிகள் மட்டக்களப்பில் உள்ளனர்.ஆனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையின வேலையற்ற பட்டதாரிகள் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையை மாற்றி கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை இனவேறுபாடின்றி சமமாக பங்கிட்டு நியமனங்கள் வழங்கப்படவேண்டும். 

அத்துடன் எமது மாவட்டத்தில் மாகாணத்தில் பட்டதாரிகள் அதிகமானோர் வேலையற்று இருக்கும்போது வெளிமாவட்டங்களில் இருந்து,குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 128 பேருக்கு இங்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான நியமனங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். 

எங்களது பிரச்சினைகளை முன்வைப்பதிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஏனை மாகாணங்கள்போல் இல்லாமல் எமது பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு பிரச்சினையும் சில விடயங்களை வெளிப்படையாக கூறமுடியாத நிலையிலுமே கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் உள்ளது. 

அவற்றினை புரிந்துகொண்டு அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் செயற்றிட்டங்களை முன்கொண்டு செல்லவேண்டும். 
« PREV
NEXT »

No comments