ஸாம்பியாவின் கப்பானி என்ற வறண்டு கிடக்கும் வாவியின் சேற்றில் சிக்கிக்கொண்ட ஒரு யானையும் அதன் குட்டியும் காப்பாற்றப்பட்டதைக் காட்டும் படங்கள் இப்படத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த படங்கள் இவைசேற்றில் சிக்கிக்கொண்ட இந்த யானைகளைக் காப்பாற்ற பிற யானைகள் முயன்றன. ஆனால் அந்த முயற்சி பலன் தரவில்லை. சிக்கிய யானையும் குட்டியும் பயந்து பிளிரின.யானைகள் சிக்குண்டதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் ஸாம்பியா வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவித்தனர்.வன விலங்குகள் விஷயத்தில் மனிதர்கள் தலையிடுவதை வனவிலங்கு பாதுகாவலர்கள் பொதுவாக விரும்புவதில்லை. ஆனால் விதிவிலக்காக இந்த சம்பவத்தில் தலையிட அவர்கள் முடிவெடுத்தனர்.சேற்றில் சிக்கிய யானைகள் மடிவதை தங்களால் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்பதால் தாங்கள் காப்பாற்ற முடிவெடுத்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
தாய் யானையை சமாளித்து குட்டி யானையின் மீது ஒரு கயிற்றைக் கட்டினர்.பின்னர் பத்து பேர் சேர்ந்து இழுத்து குட்டி யானையை வெளியே கொண்டு வர முயன்றனர். தாயை விட்டு நகர மாட்டேன் என்று அந்த குட்டி பிடிவாதம் பிடித்ததாம்.மற்ற யானைகள் குரல் கொடுத்ததால்தான் கடைசியில் ஒரு வழியாக குட்டி யானை சேற்றை விட்டு வெளியே வந்துள்ளது.பின்னர் களைத்து நின்றிருந்த தாய் யானை மீதும் கயிற்றைக் கட்டி ஒரு டிராக்டர் வண்டியைக் கொண்டு அது சேற்றிலிருந்து வெளியில் இழுக்கப்பட்டது.கயிறு இழுக்கப்பட்டவுடன், தான் தப்பிக்க வழி பிறந்துள்ளது என்பதை உணர்ந்து யானையும் வெளிவர முயன்றது.பெரும் பிரயத்தனத்திற்கு பிறகு தாய் யானையும் சேற்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

No comments
Post a Comment