Latest News

November 13, 2011

நோயாளியின் நலனை அக்கறைப்படுத்தாது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள்
by admin - 0

மருந்து குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட நோயாளியை மருத்துவர் இல்லை எனக் கூறி மருத்துவமனை ஊழியர்கள், அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதுடன் நோயாளியின் நலனில் அக்கறை காட்டாது தொலைக்காட்சி பார்ப்பதில் ஈடுபட்டதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராலி மேற்கு கோட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாமையால் அப்பகுதி நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன் ஆபத்துக்களையும் எதிர் நோக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

நேற்று இரவு 8.30 மணியளவில் அராலி மேற்கில், மருந்து குடித்து ஆபத்தான நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் கோட்டைக்காட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உரிய நோயாளியை கவனிப்பதற்க்கு மருத்துவர் இல்லை எனக் கூறிய மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியின்  நலனில் எந்த வகையான அக்கறையும் காட்டாது சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டு மீண்டும் தொலைக்காட்சி பார்ப்பதில் ஈடுபட்டதாக அந்தப் பகுதியின் பிரதேச சபை உறுப்பினர் வீ.சிவகுமார் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஜந்து கீலோ மீற்றர் சுற்றாடலுக்கு உட்பட்ட பொது மக்கள் கோட்டைக்கட்டு மருத்துவமனையை நம்பி உள்ளனர். ஆண்கள், பெண்களுக்கான விடுதிகள் காணப்படுவதுடன் பிரசவ விடுதியையும் கொண்டுள்ள இந்த மருத்துமனையில் இரவு நேரத்தில் மருத்துவர் இன்மையால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவும் அப் பகுதி மக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலை கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வருகின்ற போதிலும் உரிய அதிகாரிகள் யாரும் இதனையிட்டு நடவடிக்கையெடுக்காது இருந்து வருவதாக அந்தப் பகுதயில் உள்ள பொது அமைப்புக்களும் மக்களும் குறை கூறியுள்ளனர்.    
« PREV
NEXT »

No comments