3 பேரைக் கொண்ட ஆயுதக்குழுவொன்றே இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஜன் மொஹமட் கான் அந்நாட்டு பாரளுமன்ற உறுப்பினர் என்பதுடன் உறுஸ்கான் மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமாவார். இவர் சுட்டுக்கொல்லப்பட்ட இல்லமானது ஆப்கான் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட கானின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆப்கானின் உறுஸ்கான் மாகாணத்தில் 3000 பேரைக் கொண்ட பலமான ஆயுதக்குழுவொன்றை வழிநடத்தி வருவதாக உத்தியோகபற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த 12 ஆம் திகதி ஹமீட் கர்ஷாயின் சகோதரர் அஹமட் வாலி கர்ஷாய் தனது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரும் தனது சகோதரரைப்போல அமெரிக்க மட்டும் நேட்டோ படைகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
எனவே இவையிரண்டும் பின்லேடன் கொலையின் பழிவாங்கல்களா என புலனாய்வுப் பிரிவினர் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment