2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஏல நடைமுறைகள் முன்கூட்டியே பிரதமருக்குத் தெரிவிக்கபப்ட்டு விட்டது.
இதுதொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே அனைத்து நடைமுறைகளிலும் பிரமதருக்கும் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களுடன் வாதாடவிருக்கிறாராம் ராசா.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறைகள் குறித்து யார் யாருக்கு என்னென்ன தெரியும், யார் யார் எப்படிச் செயல்பட்டனர் என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களையும் சிபிஐ கோர்ட்டில் முன்வைக்கப் போகிறாராம் ராசா.
இதுபோக தனது வாதத்திற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராசா வைக்கப் போகும் ஆதாரங்கள் மற்றும் வாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு குறிப்பாக பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்ற பரபரப்பு டெல்லியில் நிலவுகிறது.
No comments
Post a Comment