Latest News

July 18, 2011

சீமான் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன-விஜயலட்சுமி
by admin - 0

இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மீது புகார் கூறியுள்ள நடிகை விஜயலட்சுமி, தன்னுடன் சீமான் குடும்பம் நடத்தியது தொடர்பாக 700 ஆதாரங்களை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் சீமானுக்கு கேக் ஊட்டுவது போல காட்சிகள் உள்ளன.

3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார். இது காலப்போக்கில் அப்படியே மறைந்து போய் விட்டது. இந்தநிலையில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

அவர் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மதுரையில் அவருடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளேன். 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னைத் தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.

சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments