Latest News

July 15, 2011

இளம் நெஞ்சங்களை உருக வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா
by admin - 0

அரசியல் சாராத இளம் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக் கூறி அவர்களது நெஞ்சங்களை உருக வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றுபவர் தினேஷ்ராஜா. அதே போல திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வருவர் காயத்திரி.

இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு , கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மங்கள மஹாலில் நடைபெற்றது.

திருமண நாளில் உற்றார் உறவினர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆசிர்வாதத்தை மணமகனும், மணமகளும் பெற்றனர்.

நேரம் செல்ல செல்ல மிகுந்த களைப்பில் இருந்தனர் மணமக்கள். இந்த நிலையில், திருமண மண்டபத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்ட மணமகனும், மணமளும் மிகுந்த உற்சாகமாகிவிட்டனர்.

காரணம், அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்தும், ஆசிர்வாதம் வழங்கியும் கடிதம் அனுப்பி இருந்தது, தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த தகவலால் திருமண மண்டபமே இன்ப வெள்ளித்தில் மூழ்கியது.

இந்த தகவல் செல் போன் மூலம் அதிமுக பிரமுகர்கள் பலருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் பறந்தது.

இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவே வாழ்திவிட்டார் நாம் வாழ்த்த வேண்டாமா என லோக்கல் அதிமுகவினர் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க குவிந்து விட்டனர்.

இது குறித்து மணமகன் தினேஷ் ராஜவிடம் கேட்ட போது, எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. நாம் இருப்பது தமிழ்நாட்டில், அதனால் நமது நாட்டு முதல்வருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று விரும்பி மரியாதை நிமித்தமாக அனுப்பி வைத்தோம். 

ஆனால் முதல்வர் அம்மாவிடம் இருந்து வாழ்த்து வரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் மணமக்களை வாழ்த்தி முதல்வர் கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இதை என் வாழ் நாளில் கிடைத்த அரிய பொக்கிஷமாக கருதுகின்றேன். இதை என்னால் மறக்க முடியாது என்கின்றார்.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments