Latest News

July 15, 2011

விரைவில் புதிய வெரிட்டோ மாடலை அறிமுகம் செய்யும் மஹிந்திரா
by admin - 0

மேம்படுத்தப்பட்ட புதிய வெரிட்டோ செடான் காரையும், புதிய எஸ்யூவீ காரையும் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா நிறுவன்ம் தெரிவித்துள்ளது.

கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் நடவடிக்கைகளை மஹிந்திரா முடுக்கிவிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கார் சந்தை மீது அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக, புதிய எஸ்யூவீ கார் ஒன்றை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் டிசம்பரில் புதிய எஸ்யூவீ காரை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வெரிட்டோ செடான் காரின் மேம்படுதப்பட்ட புதிய மாடலை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுதவிர, அதன் துணை நிறுவனமான கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரெக்ஸ்டன் மற்றும் கொரண்டூ எஸ்யூவீ கார்களையும் இந்திய சந்தையில் களமிறக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இந்த கார்களை பாகங்களாக இறக்குமதி செய்து, சகனில் உள்ள தனது தொழிற்சாலையில் கார்களாக அசெம்பிளிங் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், எஸ்யூவீ தயாரிப்பில் புகழ்பெற்ற சாங்யாங் மோட்டார்ஸ் எஞ்சினியர்கள், மஹிந்திரா தயாரித்து வரும் புதிய குளோபல் எஸ்யூவீ காரின் வடிவமைப்பதற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

புதிய மாடல்கள் அறிமுகம் குறித்த தகவல்களை மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் டிவிசன் தலைவர் பவன் கோயங்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments