
தற்போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவ்வமைப்பு தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையக் கட்டமைப்புக்கள் 'ஹெக்கிங்' செய்யப்பட்டுள்ளதுடன் அதனூடாகவே இவ்வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரே இதற்கு முழுப்பொறுப்பெனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
முல்லா ஒமர் உயிரிழந்து விட்டதாக அவ்வமைப்பின்
பேச்சாளர்களான சபியுல்லா முஜாஹிட் மற்றும் குஹாரி மொஹமட் யூசுப் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து குறுஞ்செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இச்செய்தி பொய்யானதென அவர்கள் இருவரும் மறுத்திருந்தனர்.
மேலும் இது தொடர்பில் அவர்களது மின்னஞ்சல்கள் முகவரியில் இருந்து செய்திகள் அனுப்பப்பட்டிருந்ததுடன், இணையத்திலும் இச்செய்தி பரவவிடப்பட்டிருந்தது. _
No comments
Post a Comment