Latest News

July 21, 2011

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்
by admin - 0

 சீனாவில் 9 வயது சிறுவனை கடத்திக் கொன்று, அவன் உடலை துண்டு துண்டாக்கி கிரைண்டரில் போட்டு அரைத்து ஆற்றில் கலந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சீனாவின் ஜெங்ஜோவைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஜாங் ஷிஹாவ்(9). அவனை கடந்த 2-11-2010 அன்று லூ ஜிவேய் என்பவர் கடத்திச் சென்றார். ஜாங்கை காணாமல் அவன் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் பலனில்லை. அவனைப் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. 


இந்நிலையில் லூ ஜாங் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ. 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஜாங் பெற்றோர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு லூ கொடுத்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினர். 2 நாட்கள் கழித்து தொடர்பு கொண்ட லூ மீண்டும் ரூ. 7 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும், இது குறித்து போலீசிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டினார்.

போலீசார் ஜாங் பெற்றோரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்றனர். போலீஸ் விசாரணையில் லூவும் அவனது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து ஜாங்கை கொன்றது தெரிய வந்தது.

அவர்கள் ஜாங்கை கொன்று அவன் உடலை துண்டு துண்டாக்கி கிரைண்டரில் போட்டு அறைத்து ஆற்றில் கலந்துள்ளனர்.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments