Latest News

June 18, 2011

யாழ்.மாணவி புதிய சாதனை
by admin - 0


யாழ்.மாணவி புதிய சாதனை
 இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் நடத்தப்படும் கனிஷ்ட பிரிவுக்கான தடகளப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி கே.தனுஷா தேசிய ரீதியில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் 20 வயதுக்குட்பட்டோருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3 மீற்றர் உயரத்தைத் தாண்டியதன் மூலம் தேசிய ரீதியில் இந்தச் சாதனையை ஏற்படுத்தி முதலிடம் பெற்றார்.இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு விமானப்படை வீராங்கனை ஒருவர் இந்தப் போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாண்டியதே தேசிய ரீதியில் சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை சே.தனுஷா நேற்று முறியடித்துச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார்.
 
கனிஷ்ட பிரிவுக்கான இந்தத் தடகளப் போட்டிகள் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. நேற்று இடம்பெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் கே.தனுஷா 3 மீற்றர் தாண்டி முதலிடத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் மற்றொரு மாணவியான எஸ்.ஜக்சனா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
 
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரர்களான வி.லவணன் 3.40 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாம் இடத்தையும், கே.றொசான் 3.30 மீற்றர் உயரம் தாண்டி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இந்தப் போட்டிகளில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 43 வீர, வீராங்கனைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 10 வீர, வீராங்கனைகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments