Latest News

June 17, 2011

2012 உலகம்அழியும், நாம் உயிர் பிழைக்க வேண்டும் என கருதும் சிலர் தப்பிக்க மலை போன்ற இடங்களில் இடம் தேடுகிறார்கள்.video in
by admin - 0

இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமைப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது.







உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு முதலில் உலக நாடுகளில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஆனால் அந்த கருத்து பொய் என எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இந்த ஆண்டு மே மாதம் முடிந்து ஜீன் மாதத்தின் மத்தியில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். பழைய பீதி மறைந்த நிலையில் புதிய கணிப்பு மக்களை அச்சபட வைத்து உள்ளது





தற்போது மாயா மக்கள் அட்டவணைப்படி உலகம் வருகிற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் திகதி அழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழியும் என்ற அறிவிப்பை கேட்டு பைரீனிஸ் மலைப்பகுதியல் ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருக்க முயற்சிப்பதாகவும் மாயா தரப்பு மக்கள் கூறுகிறார்கள்.

உளவியல் ரீதியாக பயத்திற்கு உள்ளான மக்கள் உலகம் அழியப் போகிறது என்ற கருத்தை பரப்புபவர்களின் செயல்பாட்டுக்கு இரையாவார்கள் என மிஷன் தலைவர் ஜார்ஜ் பினெக் கூறினார்.

ரோமானிய பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டில் 183வது நாளில் உலகம் அழியும் என்ற கணிப்பு உள்ளது. முந்தைய யுகங்களைப் போலவே இந்த புது கணிப்பும் பொய்த்து போகும் என பகுத்தறிவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலகம் உடைந்து விடும், நாம் உயிர் பிழைக்க வேண்டும் என கருதும் சிலர் தப்பிக்க மலை போன்ற இடங்களில் இடம் தேடுகிறார்கள்.


« PREV
NEXT »

No comments