Latest News

June 17, 2011

ரஜினிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால், அவரது மகள்களில் ஒருவரது சிறுநீரகம் பொறுத்தப்பட்டுள்ளது
by admin - 0

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஜுலை முதல்வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு இதழில் ரஜினியின் உடல் நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதி முக்கியமான செய்தி இதுதான்.

ரஜினிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால், அவரது மகள்களில் ஒருவரது சிறுநீரகம் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த காரணத்தாலும் அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்பதாலும் ஜூலை முதல் வாரம் வரை சிங்கப்பூரில் இருப்பார். அதன்பின் சிங்கப்பூரிலிருந்து வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கு சென்று ஓய்வெடுக்கக் கூடும்.

அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகளும் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் யார் அந்த மகள் என்பதை அந்த நாளிதழ் உறுதியாக தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் பேசினார். புதிய முதல்வருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.
« PREV
NEXT »

No comments