மனித குலத்தினை அச்சுறுத்தும் நோய்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றே புற்றுநோய். உயிர் கொல்லி நோயான இதனை குணப்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தவளையின் தோலில் இருந்து பெறப்படும் இருவகை புரதங்களின் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் உட்பட 70 நோய்களை குணமாக்க முடியும் என பெல்பாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் காணப்படும் 'வெக்ஸி மங்கி புரொக்' எனப்படும் தவளை இனத்தின் தோலில் சுரக்கும் ஒரு வகை புரதத்தின் மூலமே இது சாத்தயப்படுமென விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். மேலும் சீனா மற்றும் வியட்னாமைச் சேர்ந்த தேரை இனமான 'பயர் பெலிட் டொட்' இன் தோலிலும் இதே மருத்துவ குணவியல்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தவளை மற்றும் தேரை இனங்களின் தோலில் இச் சுரப்புகள் அவற்றை தமது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவே ஏற்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
'வெக்ஸி மங்கி புரொக்' தவளையின் சுரப்பும் 'பயர் பெலிட் டொட்' இன தேரையின் சுரப்பும் நேர் எதிர் தன்மையைக் கொண்டவை.
இவற்றிற்கு மனித உடலில் இரத்தக் குழாய் வளர்ச்சியை தடுக்கும் மற்றும் தூண்டும் சக்தி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'வெக்ஸி மங்கி புரொக்' (Waxy Monkey Frog) சுரப்பு

'வெக்ஸி மங்கி புரொக்' தவளையின் சுரப்பானது இரத்தக் குழாய் வளர்ச்சியை தடுப்பதுடன் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் கொண்டது.
பொதுவாக புற்றுநோய்க் கட்டிகள் உடலில் வளர்ந்து வரும் போது அவற்றின் வளர்ச்சிக்கு ஒட்சிசன் மற்றும் போசனைகள் ஆகியன தேவைப்படும்.
ஒருகட்டத்தில் அது தன் வளர்ச்சிக்கு தேவையான இரத்த ஓட்டத்தினை விநியோகம் செய்ய ஆரம்பிக்கும். இவ்வாறான நிலையில் 'வெக்ஸி மங்கி புரொக்' தவளையின் சுரப்பினை புற்றுநோய்க்கட்டியை அகற்றியதன் பின்னர் செலுத்தும் போது அது இரத்தக் குழாயை வளர விடாமல் தடுக்கும்.
இரத்தக்குழாய் வளரமுடியாமல் போவதனால் கட்டி உருவாகுவது தடுக்கப்படும் இதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தப்படுகின்றது.
'பயர் பெலிட் டொட்'(Firebellied Toad) சுரப்பு

இவ்வகை தவளைகளின் சுரப்பானது இரத்தக் குழாய் வளர்ச்சியைத் தூண்டுவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காயங்களை குணப்படுத்தல், உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை போன்றவற்றில் பாரிய பங்கு வகிக்குமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இக்கண்டுபிடிப்பானது வெற்றிகரமாக நிறைவடையுமானால் அது மனித குலத்திற்கு பாரிய நன்மையளிக்குமென்பது உறுதி.

No comments
Post a Comment