Latest News

June 12, 2011

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தை முடித்தார் பாபா ராம்தேவ்
by admin - 0

ஊழலுக்கு எதிராக தனது ஹரித்வார் ஆசிரமத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வந்த பாபா ராம்தேவ் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அதேபோன்று கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவரை டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர்.

அவரை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு கொடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த நிலையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஆன்மீகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பாபா ராம்தேவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் உண்ணாவிரதத்தின் 9-வது நாளான இன்று அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராம்தேவ், ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்று ரவிசங்கர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments