ராய்பூர்: சொற்ப காலமாக நக்சல்களின் கொடூர தாக்குதல் இல்லாமல் இருந்த நேரத்தில் இன்று அதிகாலையில் போலீஸ் முகாமில் புகுந்து மாவோ., நக்சல்கள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை போலீசார் 3 பேர் கொல்லப்பட்டனர். நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் கண்ணி வெடி கண்டறிந்து செயல் இழக்க செய்யும் வாகனமே உருக்குலைந்து போனது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வந்த நக்சல் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. வேதனை அளிப்பதாகவும், உள்துறை அமைச்சகம் இன்னும் உறங்கி கொண்டிருக்காமல் கூடுதல் கவனம் எடுத்து நக்சல்களை ஒடுக்கும் பணியில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை குரலும் எழுந்திருக்கிறது.
நேற்று சட்டீஸ்கர் மாநிலம் தண்டவத்தா மாவட்டம் காதேகல்யான் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கீதம் பகுதியில் கண்ணி வெடிகண்டுபிடித்து அழிக்கும் வாகனத்தில் சென்ற போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் அதிகாரிகள் ஆவர். இந்நிலையில் இன்று ( சனிக்கிழமை) கொண்டாவில் உள்ள பெஜூ போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த நக்சல்கள் அங்கிருந்த போலீஸ்காரர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 3 போலீசார் முகாமுக்குள்ளேயே பலியாயினர். கடந்த 3 நாட்களில் 3 தாக்குதலில் மொத்தம் 20 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 25 நாட்களாக நக்சல்கள் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியதில் இது வரை 35 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டில் சட்டிஸ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் கொத்து, கொத்தாக போலீசாரை பலி கொடுத்தது நினைவிருக்கலாம்.
No comments
Post a Comment