Latest News

June 11, 2011

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் துணை இராணுவத்தால் சுட்டுக்கொலை _
by admin - 0

பாகிஸ்தானில் இளைஞன் ஒருவரை துணை இராணுவப் படையினர் கொடூரமாகத் தாக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சியை அந்நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கராச்சி நகரில் சிந்து மாகாணத்தின் ரேஞ்சர் எனும் பிரிவைச் சேர்ந்த துணை இராணுவப் படையினர் ஓர் இளைஞனைப் பிடித்து விசாரணை செய்தபோது அவரது பெயர் ரபராஸ்கா என்றும் கொள்ளையடிக்கும் திட்டத்தில் நடமாடியதாகவும் கூறப்பட்டது. உடனே அந்த இளைஞனை தீவிர விசாரணை நடத்தாமல் கொடூரமாகத் தாக்கி துப்பாக்கியால் அவ்விளைஞனின் மார்பில் இரண்டு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பிரதமர் யுசுப்ராஸா கிலானி கூறுகையில்,'பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments